முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது
செய்யப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில்
சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

பொலிஸார் மீதும் தாக்குதல் 

குறித்த மரணத்திற்கு அந்தபகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம்
எனத் தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும்
தாக்குதல் மேற்கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Two Arrested Over Vavuniya Unrest

இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்பு காரணமாக மரணித்ததாக சட்ட வைத்திய
அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக இருவரை
அழைத்திருந்தனர்.

பிரதேச சபை உறுப்பினர் 

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ்
அவர்களை கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர்.

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Two Arrested Over Vavuniya Unrest

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில
நபர்களை கைது செய்யுமாறும் பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள்
கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்