இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் (Rajiv Gandhi) பங்கு குறித்து பாரதீய ஜனதாக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே கேள்வி எழுப்பியுள்ளார்.
1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி ராஜீவ் காந்தி அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ரொனால்ட் றீகனுக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதத்தை அவர் இதற்கு சான்றாக பகிர்ந்துள்ளார்.
இலங்கை தமிழர்
இந்தியாவும், இலங்கையும் தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு அட்டூழியங்களைச் செய்தன என்பதை இந்தக் கடிதம் விபரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இறையாண்மை கொண்ட நாடாக இருக்கும் இந்தியா அமெரிக்காவுடன் இந்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டது ஏன் என்றும் பாரதீய ஜனதாக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே கேள்வி எழுப்பியுள்ளார்.
You may like this
https://www.youtube.com/embed/pgLmg9hosR4

