முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய கல்வி சீர்திருத்த பரீட்சை முறைமை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புதிய கல்வி சீர்திருத்தத்துக்கு அமைய பாடசாலைகளில் தரம் 9 மற்றும் 11 ஆம் தரங்களில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

புதிய கல்வி சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்வி மறுசீரமைப்பு

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மறுசீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டன. இருப்பினும் அதனை செயற்படுத்த முடியவில்லை.

புதிய கல்வி சீர்திருத்த பரீட்சை முறைமை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New Education Reform Srilanka Subject Exam

தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த விடயங்களை செயற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பில் 7 முதல் 9 ஆம் தரம், 9 முதல் 11 தரம், 11 முதல் 13 ஆம் தரம் என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

9 மற்றும் 11 தரங்கள்

9 மற்றும் 11 தரங்களில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த அடிப்படையில் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.

புதிய கல்வி சீர்திருத்த பரீட்சை முறைமை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New Education Reform Srilanka Subject Exam

பாட தெரிவுகளின் போது விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். வரலாறு மற்றும் அழகியற் கலை பாடங்களை இரண்டாம் நிலையாக்காமல் அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மேலும், புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் அரசாங்கம் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும்” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்