கால்பந்தாட்ட வரலாற்றில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) புதிய சாதனையை படைத்துள்ளார்.
பெனால்ட்டி அல்லாமல் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களின் வரிசையில் அர்ஜென்டினா வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற மேஜர் லீக் கால்பந்தில் இன்டர் மியாமி அணி என்.ஒய் ரெட் புல்ஸை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அதிக கோல்கள் அடித்த வீரர்கள்
ரெட் புல்ஸுக்கு எதிரான இரட்டை கோல்கள், மெஸ்ஸி தனது பெனால்டி அல்லாத கோல்களின் எண்ணிக்கையை 764 ஆக உயர்த்த உதவியது. இது ரொனால்டோவை விட ஒன்று அதிகம்.
முன்னதாக குறித்த வரிசையில் போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) முதலிடத்திலிருந்த நிலையில், அவரை பின்தள்ளி லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) முன்னேறியுள்ளார்.
இதேவேளை, அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
எனினும் மெஸ்ஸி, ரொனால்டாவை விட 167 போட்டிகள் குறைவாக விளையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.