2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பரீட்சைத் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் வருடம் பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
இந்த நிலையில், இன்றையதினம் 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்று முடிந்தது.

இதன்போது, பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், 307,951 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

