முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – குடும்பம் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன், தாய்

தென்னிலங்கையில் காதல் விவகாரம் காரணமாக இளைஞன் ஒருவரை குடும்பம் ஒன்று கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தறை, அகுரஸ்ஸ பகுதியில் 19 வயது இளைஞனும் அவரது தாயாரையும் தாக்கிய ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடத்தல் மற்றும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 வயது சந்தேக நபர், அவரது 53 வயது தந்தை, 49 வயது தாய், 28 வயது சகோதரி, மற்றும் 22 வயது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞன் கடத்தல்

நீண்டகால பகை காரணமாக குறித்த இளைஞனை வலுக்கட்டாயமாக கடத்தி, சந்தேக நபர்கள் தமது வீட்டுக்கு அருகிலுள்ள தூண் ஒன்றில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - குடும்பம் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன், தாய் | Boy And Mother Attacked By A Family In Matara

அகுரஸ்ஸ, மலிடுவ பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அகுரஸ்ஸ காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்பதாம் திகதி வீடு சென்று கொண்டிருந்த இளைஞனை, சந்தேக நபர்களான குடும்ப உறவினர்களால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் மீது தாக்குதல்

தாக்கப்படுவதாக தகவலறிந்த தாய் அந்தப் பகுதிக்கு சென்று மகனை மீட்க போராடிய தாய் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - குடும்பம் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன், தாய் | Boy And Mother Attacked By A Family In Matara

அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று இளைஞனை மீட்டுள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான மகனையும் தாயையும் அகுரஸ்ஸா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்