மத்திய வங்கிக்காக அதன் அதிகாரிகள் வாகனங்களை வாங்குவதற்கு நிதி அமைச்சிடம்
ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் (COPF)
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி சட்டத்தின் கீழ், அந்த நிறுவனம் சுயாதீனமாக இயங்குகிறது.
எனவே
அத்தகைய ஒப்புதல்களுக்கு அமைச்சின் வரம்புக்குள் வராது என்று குழுவில்
முன்னிலையான நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை எவ்வாறு வாங்கியுள்ளனர்
மத்திய வங்கி எத்தனை வாகனங்களை வாங்கியுள்ளது அல்லது அவற்றின் மதிப்பு குறித்த
பதிவுகள் அமைச்சகத்திடம் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
தற்போதுள்ள விதிமுறைகளை தெளிவுபடுத்தும் வகையில், 2022 ஆம் ஆண்டு சுற்றறிக்கை
அமைச்சு தனியார் வாகனங்களை முழுவதுமாக வாங்குவதைத் தடைசெய்கிறது.
இருப்பினும்
அவை பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் பெறலாம் அல்லது செயல்பாட்டு குத்தகைகள்
அல்லது வாடகைகள் மூலம் தனியார் வாகனங்களைப் பெறலாம் என்று அதிகாரிகள்
குறிப்பிட்டனர்.
மத்திய வங்கி அதிகாரிகள் வாகனங்களை எவ்வாறு வாங்கியுள்ளனர் என்பது குறித்து
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கும் விதமாக இந்த விடயம் வெளியிடப்பட்டுளளது.