முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிய தாக்குதலை மேற்கொள்ள தயாரான தமிழ் இளைஞர்கள் – பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

பாரிய தாக்குதலுக்காக ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த 3 தமிழ் இளைஞர்களை கைது செய்ய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

ஜூலை மாதம் 21 ஆம் திகதி கிரிபத்கொடயில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் T-56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

கைக்குண்டுகள் 

அந்த கைக்குண்டுகள் கொழும்புக்கு கொண்டு வர தயாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைக்குண்டுகளை சேமித்து வைத்திருந்த 3 சந்தேக நபர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் இளைஞர்கள்

அதற்கமைய, கைது செய்வதற்காக தேடப்படும் மூவரின் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த 30 வயதான சிவரூபன், 27 வயதான இளங்கோ செட்சின்னன், 27 வயதான மகேந்திரன் யோகராஜா என்ற தமிழ் இளைஞர்களே தேடப்பட்டு வருகின்றனர்.

பாரிய தாக்குதலை மேற்கொள்ள தயாரான தமிழ் இளைஞர்கள் - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு | Police Seeking Public Support To Arrest 3 Persons

சந்தேக நபர்களில் தொடர்பான தகவல் யாருக்காவது தெரிந்தால் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் 0718591966 அல்லது 0718596150 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

Gallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்