யாழ்ப்பாணம்- நெல்லியடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பெருந்தொகை பண
மோசடியுடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெல்லியடியில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் இருந்து,
வெளிநாட்டு நாணயத் தாள்கள் உள்ளடங்கலாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபா வரை
அண்மையில் மோசடி செய்யப்பட்டிருந்தன.
மேலதிக விசாரணைகள்
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையிலேயே, சந்தேகநபர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், குறித்த நபர்களிடமிருந்து ஒருதொகைப் பணம்
மீட்கப்பட்டதுடன், எஞ்சிய பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

