திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் கே.சிந்துஜன், கடந்த இரண்டு மாதங்களில்
இரண்டாவது முறையாக, இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப்
பிரிவால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவு நிகழ்வு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய செயற்பாட்டாளரான சிந்துஜனை, இன்று
முற்பகல் 9 மணிக்கு திருகோணமலை அலுவலகத்துக்கு வருமாறு, பயங்கரவாத எதிர்ப்பு
மற்றும் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்திலும் அவர் விசாரணைக்கென்று அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது, விடுதலைப்புலிகளின் போராளி திலீபனுக்கு 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட
நினைவு நிகழ்வு தொடர்பாக சிந்துஜன் விசாரணை செய்யப்பட்டிருந்தார்.

