முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையை ஆபத்தான நாடாக மாற்றிய கெஹல்பத்திர – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

பாதாள உலக குழுவின் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் இடத்தை குற்றப் புலனாய்வு திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது.

நுவரெலியாவில் செயற்படும் தொழிற்சாலையில் இரண்டு பாகிஸ்தானியர்களும் ஐஸ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நாட்டில் ஐஸ் போதை பொருள் விநியோகிக்கும் உரிமையை கையகப்படுத்தும் நோக்கில் கெஹெல்பத்தர பத்மே இந்த ஐஸ் தொழிற்சாலையை ஒரு வாடகை வீட்டில் நடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஐஸ் தொழிற்சாலை

நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள்
தொழிற்சாலையை முன்னெடுக்க கெஹெல்பத்தரவுக்கு உதவிய நெருங்கிய நண்பர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஆபத்தான நாடாக மாற்றிய கெஹல்பத்திர - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் | Padme S Nuwara Eliya Ice Drug Factory Raided

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கெஹெல்பத்தர பத்மே இந்த ஐஸ் தொழிற்சாலையில் 04 மில்லியன் ரூபாய் முதலீடு செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் ஒரு வீட்டை போதைப்பொருள் உற்பத்தி ஆலையை நடத்த வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், இதற்காக 2,000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இரசாயனங்கள் இறக்குமதி

போதைப்பொருள் ஐஸ் நாட்டில் தயாரிக்கப்படுவதாக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையை ஆபத்தான நாடாக மாற்றிய கெஹல்பத்திர - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் | Padme S Nuwara Eliya Ice Drug Factory Raided

2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், போதைப்பொருள் ஐஸ் தொடர்பாக நாட்டில் எந்த சட்டமும் நடைமுறையில் இல்லாதபோது, ​​கொஸ்கம தொழில்துறை எஸ்டேட்டில் கொரிய நாட்டினர் குழு ஒன்று ஐஸ் தயாரித்ததாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் வெளிப்படுத்தியிருந்தது.

சட்டம் இல்லாததால், அந்த நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத போதிலும், கொரிய நிறுவனம் நிறுவனத்தை மூட வேண்டியிருந்தது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று பொலிஸார் நடத்திய சோதனையின் போது நாட்டில் ஐஸ் உற்பத்தி குறித்த தகவல்கள் மீண்டும் தெரிய வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.