தினேஷ்
அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தினேஷ். இதன்பின், விசாரணை திரைப்படம் இவருக்கு கைகொடுத்தது.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும், கடந்த ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம்தான் அட்டகத்தி தினேஷை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்தது.


ஸ்ரீதேவி மறைந்த போது நான் சிரித்தேனா?.. மகள் ஜான்விகபூர் உருக்கம்
ரகசியம்!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தினேஷ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு கூச்ச சுபாவம் நிறைய இருந்தது. இதனாலேயே கல்லூரி முடித்தும், வேலைக்கு சேராமலேயே இருந்து வந்தேன். பின், அப்படி இப்படி என்று பல கஷ்டங்களுக்கு பின் நடிகனாகி விட்டேன்.
நடிக்க தொடங்கிய பின் கேமராவை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வராது. ‘குக்கூ’ படத்தில் நடித்த பின் தான் என் நடிப்பு மேம்பட்டது. வேலை என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு என்பதை உணர்ந்து கொண்டேன்.
லப்பர் பந்து படத்திற்கு பின் 100 கதைகளை நான் கேட்டிருக்கிறேன். இருப்பினும் எதுவுமே அமையவில்லை. எனக்கு வேண்டாம் என்றாலும், அதை சிரித்தபடி அமைதியாக சொல்லிவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.


