முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை வைத்தியசாலையின் சேவைத்தரம் குறித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

திருகோணமலை வைத்தியசாலையின் தரமான சேவையை உறுதிப்படுத்தக் கோரிய
அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (05) வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்றது.

பொதுமக்கள் சமூக நலன் விரும்பிகள் இணைந்து குறித்த கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, “வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப சத்திர சிகிச்சைக் கூடங்களும் தரம் உயர்த்தப்பட
வேண்டும்
சிற்றூழியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

பல்வேறு கோரிக்கைள் 

களங்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் வேண்டும். நோயாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும்,
மகப்பேற்றுக்காக கட்டப்பட்ட சத்திரசிகிச்சைக்கூடம் இயக்கப்பட வேண்டும், எலும்பு முறிவுக்காக தனியான தனியான களம் வேண்டும்.

திருகோணமலை வைத்தியசாலையின் சேவைத்தரம் குறித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் | Hopital Trincomalee People Protest

ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது. பிண அறையில் வேலை செய்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள A&E கட்டடம் திறக்கப்பட வேண்டும்.

பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள்” போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் குறித்த கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அங்கு விஜயம் ஒன்றை
மேற்கொண்டிருந்த நிலையில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்ததுடன் இதன்
பிரதிகள் பிரதியமைச்சர், மாவட்ட ஆளுங்கட்சி, எதிர் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலையில் அண்மையில் தனிநபர் ஒருவரால் கவனயீர்ப்பொன்றும்
முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.