முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குடும்பபெண்ணொருவரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரி: யாழ் நபருக்கு வலைவீச்சு

அம்பாறையில் (Ampara) குடும்பபெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மீதே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளை D.C.D.B என அழைக்கப்படும்
அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல் பிரிவிற்குட்பட்ட
விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது
மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்ற
குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை (30) படுகொலை
செய்யப்பட்டிருந்தார்.

குடும்பபெண்ணொருவரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரி: யாழ் நபருக்கு வலைவீச்சு | Police Hunt Key Suspect In Ampara Women Murder

குறித்த குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த
ஜுன் மாதம் 25 ஆந் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான
இரட்டையர் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டியில் பணிப்பெண்களாக
பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு
சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

நகைக்கடை உரிமையாளர்

இந்தநிலையில், குறித்த விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில்
தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர்
நாட்டின் ஜனாதிபதி உட்பட காவல்துறை மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் என பல
தரப்பினருக்கு உரிய நீதி கோரி கடிதம் ஒன்றினை எழுதி உரிய படுகொலையின்
சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரினை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி
இருந்தார்.

குடும்பபெண்ணொருவரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரி: யாழ் நபருக்கு வலைவீச்சு | Police Hunt Key Suspect In Ampara Women Murder

இதனடிப்படையில், மீண்டும் துரிதமாக செயற்பட்ட D.C.D.B என அழைக்கப்படும்
அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் நீண்ட பல்வேறு வடிங்களில்
விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்
தான் இப்படுகொலையின் பிரதான சூத்திரதாரி என கண்டறிந்துள்ளதுள்ளனர்.

இதன்பின்பு, குறித்த கடையில்
பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய
பணியாளரையும் வெள்ளிக்கிழமை (05) கைது செய்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணை

இந்த நடவடிக்கையை அறிந்த
பிரதான சந்தேக நபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற
நிலையில் அச்சந்தேக நபரை தேடி D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட
குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளனர்.

குடும்பபெண்ணொருவரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரி: யாழ் நபருக்கு வலைவீச்சு | Police Hunt Key Suspect In Ampara Women Murder

இதே வேளை தப்பி
சென்ற பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டதுடன் படுகொலை
செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தங்கையை திருமணம் செய்து பெரிய நீலாவணையில்
வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்தேக நபரே நீண்ட காலமாக குறித்த கொலை திட்டத்தை
தீட்டி அரங்கேற்றியுள்ளதை ஆரம்ப கட்ட விசாரணையில் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

பிரதான சூத்திரதாரி

அத்தோடு, 94 நாட்களின் பின்னர் கைதான பிரதான சூத்திரதாரியின் கடையில்
பணியாற்றிய சூத்திரதாரியின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய
பணியாளரையும் அம்பாறைக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட
குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வந்துள்ளனர்.

38 வயது மதிக்கத்தக்க
இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள்
ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை
செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

குடும்பபெண்ணொருவரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரி: யாழ் நபருக்கு வலைவீச்சு | Police Hunt Key Suspect In Ampara Women Murder

அத்தோடு, இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப
பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன்
சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமராவின்
காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால்
எடுத்துச்செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர படுகொலை
செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கடந்த கால கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மிக
நீண்ட விசாரணை மேற்கொண்டு அவற்றை மீள தன்னிடம் பெற்று வழங்கியதற்காகவும் துரித
கதியில் கொலையாளிகளை இனங்கண்டு பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினருக்கு
பல்வேறு உதவிகளை வழங்கியதற்காக படுகொலையான பெண்ணின் கணவர் உருக்கமாக
நன்றிகளை கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே.இப்னு
அஸாருக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.