முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சமப்வமொன்று தொடர்பில் லன்சா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் நீதிமன்றம் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
கடந்த 2006ம் ஆண்டு இடம்பெற்ற போராட்டமொன்றின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் நிமால் லன்சா தரப்பில் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் அவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

