மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டவை என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (09) மாலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புள்ளமை கண்டறியப்பட்டால்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து சுங்கப் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலன்கள் தொடர்பில் தற்போதைக்கு குற்றப் புலனாய்வுத்துறையும் சுங்கத்துறையினரும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எந்தவொரு அதிகாரியாவது குறித்த சம்பவத்துடன் தொடர்புள்ளமை கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

