உரிமம் இல்லாமல் யானை வைத்திருந்த குற்றச்சாட்டில் சமரப்புலியைச் சேர்ந்த அலி ரொஷான் எனப்படும் நிராஜ் ரொஷானுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்றையதினம்(19.09.2025) குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20.6 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
3 சந்தேகநபர்கள் விடுதலை
மேலும், உரிமம் இல்லாமல் அவர் வைத்திருந்த யானையை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய 3 சந்தேகநபர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

