முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முடங்கிய அரசாங்கம்.. மிகப்பெரிய பணிநீக்கத்தை சந்திக்கவுள்ள அமெரிக்கா!

ஆயிரக்கணக்கான அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை இன்று(02.10.2025) காலை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நிர்வாகத்தின் மதிப்புகளுடன் ஒத்துப்போகாத நிறுவனங்களை சேர்ந்தோர் பணிநீக்கம் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசாங்க சேவைகள்

குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் புதிய செலவுத் திட்டத்தில் உடன்படத் தவறியதால் அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முடங்கிய அரசாங்கம்.. மிகப்பெரிய பணிநீக்கத்தை சந்திக்கவுள்ள அமெரிக்கா! | Us Government Shutdown 750 000 Workers Affected

இதனால், பல அரசாங்க சேவைகள் இப்போது மூடப்பட்டுள்ள நிலையில், சுமார் 750,000 அரசு ஊழியர்கள் சம்பளமின்றி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

விமான நிலைய ஊழியர்கள் மற்றும் சட்டத்துறை ஊழியர்கள் போன்ற சில அத்தியாவசிய ஊழியர்கள் இன்னும் கடமையில் உள்ளனர்.

சேவை முடக்கம்

ஆனால், பணிநிறுத்தத்தின் போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கிய அரசாங்கம்.. மிகப்பெரிய பணிநீக்கத்தை சந்திக்கவுள்ள அமெரிக்கா! | Us Government Shutdown 750 000 Workers Affected

இந்த சேவை முடக்கத்தால் வொஷிங்டன் டி.சி மற்றும் நியூயார்க்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அமெரிக்காவின் முக்கிய பகுதிகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்