முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக நாடுகளின் ஊழல் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

ஊழல் அடிப்படையில் இலங்கை 120வது இடத்தில் உள்ளது என்று லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பட்டறையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் பெரும்பாலானோர் நேர்மையானவர்கள் அல்ல என்றும், நாட்டில் ஊழல் அதிகரிப்பதற்கு இதுவே ஒரு முக்கிய காரணி எனவும் ரங்க திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழலுக்கான பட்டியலை

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் 180 நாடுகளை எடுத்து ஊழலுக்கான பட்டியலை உருவாக்கியுள்ளது, அதன்போது ஊழல் குறைந்த நாடு முதலிடத்திலும், ஊழல் மிகுந்த நாடு 180வது இடத்திலும் உள்ளது.

உலக நாடுகளின் ஊழல் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | List Of Corrupt Countries Sri Lanka S Place

அதில் இலங்கைக்கு நூற்று இருபத்தொன்றாவது இடம்.

இன்று சில நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காமல் தங்கள் வேலையைச் செய்ய முடியாது.

லஞ்சம் வாங்கியதாக முத்திரை குத்தப்பட்ட நிறுவனங்கள் கூட என்னை வந்து விரிவுரைகள் வழங்கச் சொல்கின்றன.

அப்பொது, நான் எதற்கு வரச் சொன்னீர்கள் என்று கேட்டேன். லஞ்சம் வாங்கினால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாதா என்று கேட்டேன். அதனால் என் விரிவுரைகள் தேவையற்றவை.

மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு, மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளரின் அலுமாரியில் 41 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.

அது அவரின் வாரந்த லஞ்ச வசூல், இவற்றை எல்லாம் வெள்ளிக்கிழமையானதும் பிரித்து எடுத்துகு் கொள்வார்கள்.அதுதான் உண்மையான நிலைமை. ” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.