பொலன்னறுவை பண்டிவேவாவில் 2.3 கிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருள் கடத்தலில்
இருந்து கிடைத்ததாக நம்பப்படும் ரூ. 3.02 மில்லியன் பணத்துடன் 28 வயது நபர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பொலிஸார் மற்றும் மனம்பிட்டிய K9 பிரிவு இணைந்து நடத்திய கூட்டு
நடவடிக்கையின் போது, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணைகள்
மேலும், விசாரணைகள் தொடரும் வரை சந்தேகநபர் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

