யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 14 பேர் போதைப்பொருட்களுடன் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 பேர் நேற்று (23.10.2025) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கைதாகும் பலர்
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 38 வயதுக்கு உட்பட்டவர்களாகக் காணப்படும்
அதேநேரம் ஒருவர் 16 வயது சிறுவனாகவும் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, யாழ்ப்பாணத்தில் 3 தினங்களுக்கு முன்பும் 11 பேர்
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

