இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் கப்பல் ஒன்றின்
இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த கப்பல் பேரிடரை
எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உதவி கோரப்பட்ட நிலையில், இந்த
வணிகக் கப்பலின் பணியாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படை கப்பலான சமுத்ரா
கப்பல் புறப்பட்டுச் சென்றுள்ளது.

மீட்பு நடவடிக்கை
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கடல்சார் தேடல் மற்றும் மீட்பு
மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக கடற்படை
தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் இந்திய, துருக்கிய மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் 14
பணியாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

