முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் இன்றையதினம்(25) மதியம்
மாடுகளை திருடிய நபர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மடக்கிப்
பிடித்துள்ளனர்.

இரண்டு மாடுகளை திருடிய நிலையிலே மூவர் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளனர்.

முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  நானாட்டான் பிரதேசத்தின் உமநகரி வீதியில் நேற்று (24) இரவு மாடுகளை கொண்டு
செல்வதற்காக சந்தேகிக்கும் வகையில் ஆட்டோவில் சுற்றித்திரிந்த மூவர் அப்பகுதி
இளைஞர்கள் சிலரை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளனர். 

மன்னாரில் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர் | Three Arrested By Youths In Mannar

கிராமத்து இளைஞர்கள் அவர்களை துரத்திச் சென்று மன்னார் தள்ளாடி பெரிய
பாலத்தடியில் பிடித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர்கள் மன்னார் நகரப் பகுதியில் சாவற்கட்டு மற்றும் சாந்திபுரம்
பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருடப்பட்ட மாடுகள் கட்டைக்காடு மற்றும் மற்றும் உமநகரி கிராமங்களை சேர்ந்த
உரிமையாளர்கள் உடையது என தெரிய வந்துள்ளது.

குறித்த இரு மாடுகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன்,  சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட
முறைப்பாட்டிற்கு அமைவாக முருங்கன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நானாட்டான் பிரதேசத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலையிலும் பாரிய சிரமப்பட்டு வளர்க்கும் கால்நடைகள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக கால்நடை
வளர்ப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்