இந்திய பல்துறை மானிய திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி
திட்டங்களை செயற்படுத்த இலங்கை அரசும் இந்திய அரசும் ஒரு புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளன.
இதன்படி, தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 33 திட்டங்களுக்கு
நிதியளிக்க இந்தியா சுமார் 2,371.83 மில்லியன் ரூபாய் மானியத்தை வழங்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த ஒவ்வொரு திட்டமும் இந்திய உயர்ஸ்தானிகரக மற்றும் பொது நிர்வாகம், மாகாண
சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகங்களுக்கு இடையே ஒரு தனி புரிந்துணர்வு
ஒப்பந்தத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

