பிரித்தானியாவில் (United Kingdom) இந்திய (India) வம்சாவளியைச் சோ்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கண்டனத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சா் ஷபானா மஹ்மூத் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிரித்தானியாவின் வால்சால் நகரின் பாா்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 20 வயதுடைய சீக்கிய மாணவி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி 32 வயதுடைய நபா் ஒருவரால் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
இனவெறித் தூண்டுதல்
இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்தநிலையில், இச்சம்பவம் குறித்து பிரித்தானிய உள்துறை அமைச்சா் ஷபானா மஹ்மூத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், வால்சால் நகரில் இனவெறித் தூண்டுதலுடன் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக் குற்றம் மற்றும் ஒரு கொடூரமான செயல்.
[EBAYM7N
]
கூடுதல் தகவல்கள்
பாதிக்கப்பட்டவருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
உள்ளூா் சீக்கிய சமூகம் மத்தியில் நிலவும் அச்ச உணா்வை நான் அறிவேன்.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ, காவல் துறையும் உள்ளூா் தலைவா்களும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வாா்கள் என்று உறுதியளிக்குமாறு நான் கோரியுள்ளேன்.
இந்தத் தாக்குதல் தொடா்பான கூடுதல் தகவல்கள் தெரிந்தவா்கள் உடனடியாக முன்வந்து காவல் துறையைத் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

