ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த 29 வயது இளைஞர் அனில்குமார் பொல்லா சுமார் ரூ. 240 கோடி பணத்தை வென்றுள்ளார்.
அபுதாபியில் ஏற்றுமதியாளராக தொழில் புரிந்து வரும் அனில்குமார், 23வது அதிர்ஷ்ட நாள் குலுக்கலில் ஏழு வெற்றி எண்களும் பொருந்தியதால், இந்த முழு பரிசுத் தொகையையும் யாருடனும் பகிராமல் தனியாக வென்றுள்ளார்.
ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி
அதிஷ்ட இலாப குழுவிலிருந்து அழைப்பு வந்தபோது தான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாக அனில்குமார் தெரிவித்துள்ளார். இது தனது நீண்ட நாள் கனவு என்றும், அழைப்பு வந்தபோது ஆரம்பத்தில் நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.

credit newsx
88 லட்சம் போட்டியாளர்களில் இவர் ஒருவராக இந்த மெகா பரிசை வென்று, ஒரே இரவில் அமீரகத்தின் புதிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.

