முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் திருட்டு: பொலிஸார் விசாரணை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய
சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம்
திருடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

இதன்படி நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் சனிக்கிழமை (01) இரவு
ஆலயத்தின் பின் கதவு வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியலை உடைத்து
அதிலிருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.

இதில் மூன்று உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு
ஆலயத்தின் பின்புறத்தில் நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசி சென்றுள்ளனர்.

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் திருட்டு: பொலிஸார் விசாரணை | Nuvarelia Sitaeliya Theft At Goddess Sita Temple

பொலிஸார் மேலதிக விசாரணை

அத்துடன்
ஆலயத்தில் உள்நுளைந்த திருடர்கள் தங்களது உருவங்கள் பதிவாகாமல் இருக்க
ஆலயத்தின் பிரதான காரியாலயத்தில் உள்ள முழு ஆலய வளாகத்தை கண்காணிக்கும்
சி.சி.டி.வி. கமராவின் முழு இணைப்பையும் துண்டித்துள்ளனர்.

மேலும், சி.சி.டி.வி. காணொளிகளை
சேமிப்பு செய்யும் பதிவு கருவிகளையும் , பெறுமதியான கையடக்கத் தொலைபேசி
ஒன்றினையும் திருடி சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிஸார் கைரேகைகளை பதிவு
செய்து , ஆலயத்தில் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும்
சி.சி.டி.வி கண்காணிப்பு கமரா பதிவுகளை கொண்டும் மோப்ப நாயின் உதவியுடன்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் திருட்டு: பொலிஸார் விசாரணை | Nuvarelia Sitaeliya Theft At Goddess Sita Temple

பெருந்தொகை பணம் திருட்டு

சந்தேகநபர்கள் ஆலயத்தில் உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பெருந்தொகை பணத்தை
திருடிச்சென்றுள்ளதாகவும், அவை இன்னும் கணக்கெடுக்கப்படவில்லை என பொலிஸாரின்
ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் திருட்டு: பொலிஸார் விசாரணை | Nuvarelia Sitaeliya Theft At Goddess Sita Temple

சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த
நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன்
மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்