கொழும்பு மிரிஹான பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 31 இளைஞர் யுவதிகள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (01.11.2025) நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றிலேயே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு 500இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
மேலும், இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

