முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வட்ஸ்அப் பயனாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

வட்ஸ்அப் மூலம் பணம் கோருவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஜெயனெத்சிறி தெரிவித்துள்ளார்.

வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உதவி காவல் கண்காணிப்பாளர் ஜெயனெத்சிறி கூறியுள்ளார்.

 வட்ஸ்அப் மோசடியாளர்கள்

சமூகத்தில் பிரபலமான நபரின் வட்ஸ்அப் இலக்கத்தை கண்டுபிடிக்கும் மோசடியாளர்கள், அதிலிருந்து பலருக்கு தகவல்கள் அனுப்புவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வட்ஸ்அப் பயனாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning For Whatsapp Users In Sri Lanka

அதில் குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் ஒரு Zoom Meeting இருப்பதாகக் கூறும் மோசடியாளர்கள் அதில் மக்களை இணையுமாறு கோரிக்கை விடுகின்றனர்.

அதற்காக அனுப்பப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யும் போது, மீட்டிங்கில் நீங்கள் இணைத்து கொள்வதனை உறுதிப்படுத்துவதற்காக ரகசிய இலக்கம் ஒன்று அனுப்பப்படுகிறது.

கையடக்க தொலைபேசிகளுக்கு வரும் குறுந்தகவல்களை, தமக்கு அனுப்புமாறு மோசடியாளர்கள் கோருகின்றனர்.

பண மோசடி

பின்னர் வேறொருவர் ஒரு வட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, வட்ஸ்அப் அனுப்பிய OTP கேட்கப்படும். அதனை நம்பி அனுப்புவோரின் வட்ஸ்அப் மோசடியாளர்களால் ஹெக் செய்யப்படுகிறது.

இலங்கை வட்ஸ்அப் பயனாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning For Whatsapp Users In Sri Lanka

அவ்வாறு மோசடியாளர்களிடம் சிக்கும் வட்ஸ்அப் கணக்குகளில் உள்ள தொலைபேசிகளுக்கு உருக்கமான குறுந்தகவல் ஒன்று அனுப்பப்படுகிறது.

எனக்கொரு பிரச்சினை உள்ளதாக கூறிச் செய்திகளை அனுப்பி, எனக்கு அவசரமாகப் பணம் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

பலர் அவரை நம்பிப் பணம் வைப்புச் செய்கிறார்கள்.

பல நாட்களின் பின்னர் உங்கள் கணக்கு தொலைந்துவிட்டதை நீங்கள் உணருகிறீர்கள். பலர் இந்த மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள்” என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.