ஹிங்குராங்கொடை பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு (4) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் தனது சகோதரனை விடுவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிங்குராங்கொடை பொலிஸாரின் கூற்றுப்படி, இலங்கை மின்சார சபையின் (CEB) இரண்டு ஊழியர்கள் அளித்த தனித்தனி முறைப்பாடுகளை தொடர்ந்து, யடியல்பத்தன பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலை
மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்க சந்தேகநபரின் சகோதரரின் வீட்டிற்கு மின்சார சபை ஊழியர்கள் சென்றதாக கூறப்படுகிறது,
இதன்போது பிரதேச சபை உறுப்பினர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அவர்களின் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் சந்தேக நபர் தனது சகோதரர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, அதிகாரிகளை அச்சுறுத்தி, அவரை விடுவிக்கக் கோரி பலத்தை பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் புதன்கிழமை(5) அன்று ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தினர்,

