உயர்தரப் பரீட்சைகள் முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீட்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் காலதாமதம் இல்லாமல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நேற்று(10) தொடங்கிய நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
மதிப்பீடு நடவடிக்கை
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே,
“சரியான நேரத்தில் பரீட்சை தொடங்கியதுடன், அனைத்து பரீட்சை மையங்களிலும் எந்த இடையூறும் இல்லாமல் பரீட்சை வழக்கம் போல் நடத்தப்பட்டது.

தற்போது, பரீட்சை முடிவதற்கு முன்னர் மதிப்பீடு நடவடிக்கைகளைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால், திட்டமிடப்பட்ட அட்டவணையைச் சரிபார்த்து, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நியமிக்கப்பட்ட பரீட்சை மையத்திற்குச் செல்லுங்கள்.
அனுமதிச் சீட்டை எடுத்துச் சென்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அரை மணி நேரத்திற்கு முன்பே இருக்கையில் அமருங்கள்.” என தெரிவித்துள்ளார்.

