கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும்
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில்
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய
நேற்று(19.11.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கொலொங்கொட – ஹசலக்க பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்தபோது மேற்படி நபர் கைது
செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 12 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு
குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

