ஒரு கிலோ கரட்டை ரூ.3,500க்கு விற்ற வர்த்தகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையை சாதகமாக பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு
அதன்படி, காலியின் கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறி கடைகளை ஆய்வு செய்தபோது, ஒரு வர்த்தகர் ஒரு கிலோ கரட்டை ரூ.3,500க்கு விற்றதாகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.


