2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய
சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார
சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும்
செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று அமெரிக்கா
தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இலங்கைக்கான அடுத்த தூதர் வேட்பாளர்
எரிக் மேயர் செனட் உறுப்பினர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இருப்பிடம்
இலங்கை இந்தியப் பெருங்கடலில் உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளின்
அருகே அமைந்துள்ளது.

அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மற்றும் உலகின் கடல்வழி கச்சா எண்ணெயில்
மூன்றில் இரண்டு பங்கு அதன் நீர்வழிகளைக் கடக்கின்றன.
எனவே இலங்கையின் இருப்பிடம், அமெரிக்க மூலோபாய நலன்களின் மையப் புள்ளியாக
மாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது
முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று மேயர் கூறினார்.
எச்சரிக்கை
600க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று லட்சக்கணக்கான மக்களை இடம்பெயர்த்த டிட்வா
சூறாவளிக்கு அமெரிக்கா வழங்கிய உதவியையும் அவர் எடுத்துரைத்தார்.
இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறிப்பிட்ட மேயர், நாடு மீள்தன்மை கொண்டதாக
மாறி வருகிறது.

கொழும்பு துறைமுகத்தின்; விரிவாக்கத் திட்டங்களை பொறுத்தவரையில், அடுத்த
ஆண்டுக்குள் சரக்கு கையாளும் திறனை இரட்டிப்பாக்கும் என்று அவர் கூறினார்.
இதேவேளை இந்த சந்தர்ப்பத்தில் கருத்துரைத்த செனட் வெளியுறவுக் குழுத் தலைவர்
ஜிம் ரிட்ச் இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் சீனாவின் பங்கு, ஏனைய
நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று குறிப்பிட்டார்.

