யாழ்ப்பாணம் – செம்பியன்பற்று பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (18.12.2025) இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளின் பின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
செய்திகள் – பூ.லின்ரன்

