நீண்ட தூர பேருந்து சேவை ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக மதுபானங்களை பொதி செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட கர்ப்பிணி பெண் ஒருவரை வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புத்தளம் – வென்னப்புவ பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய சந்தேகநபர் நேற்று (20) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சந்தேகநபர் தனது கணவருடன் மதுபானங்களை இரகசியமாக பொதி செய்து விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடமிருந்து 96 மதுபான போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்ப்பிணிப்பெண் ஒருவர் நீண்ட தூர பேருந்து சேவை ஊழியர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் அவரது வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானத் தொகையும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

