இலங்கையின் தற்போதைய அமெரிக்க தூதர் உட்பட, உலகளாவிய அமெரிக்க தூதர் மற்றும் பிற மூத்த தூதரக பதவிகளில் இருந்து கிட்டத்தட்ட 30 தொழில்
இராஜதந்திரிகளை ட்ரம்ப் நிர்வாகம் திரும்ப அழைத்துள்ளது,
வெளிநாடுகளில் அமெரிக்க இராஜதந்திர நிலைப்பாட்டை மறுவடிவமைக்கும் நகர்வின்
அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு கொள்கை
முன்னதாக, இலங்கை உட்பட குறைந்தது 29 நாடுகளில் உள்ள தூதரகத் தலைவர்களின்
பதவிக்காலம் ஜனவரியில் முடிவடையும் என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் அனைவரும் ஜோ பைடன் நிர்வாகத்தில் தங்கள் பதவிகளை
ஏற்றுக்கொண்டவர்களாவர்.

அமெரிக்க வெளியுறவு கொள்கையின்படி, தூதர்கள் பொதுவாக மூன்று முதல் நான்கு
ஆண்டுகள் தங்கள் பதவிகளில் தங்கியிருந்தாலும், ஜனாதிபதியின் விருப்பப்படி
பணியாற்றுகிறார்கள்.
இந்த மாற்றங்களுக்கு உள்ளாவோர் தங்கள் வெளிநாட்டு சேவை பணிகளை இழக்க
மாட்டார்கள். ஆனால் அவர்கள் விரும்பினால் வேறு பணிகளுக்காக வோஷிங்டனுக்குத்
திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

