தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
ரெலோவின் 12வது தேசியமாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது.
இதன்போது இயக்கத்தின் புதியநிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக கோவிந்தம் கருணாகரன்(ஜனா) வும், உபதலைவராக சுரேன்குருசாமியும்,நிதிச்செயலாளராக க.விஜிந்தன்,நிர்வாகசெயலாளராக நித்தியானந்தனும்,இளைஞரணி செயலாளராக பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து தலைமைக்குழு,மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
Source: https://samugammedia.com/selvam-aadikalanathan-is-back-as-the-chairman-of-relo-1781513919

