நடிகை அனுஷ்கா ஒருகாலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். இளசுகளின் கனவு கன்னியாக இருந்த அவரை தற்போது திரைப்படங்களில் பார்ப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது.
அவர் கடந்த சில வருடங்களாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில் படஙக்ளில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார். கடந்த நான்கு வருடங்களில் வெறும் 2 படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார்.

தமனுக்கு ஐபோன் 16 கிப்ட்
அனுஷ்கா ஷெட்டி இசையமைப்பாளர் தமன்-க்கு வருடம்தோறும் புதிதாக ரிலீஸ் ஆகும் ஐபோன் மாடலை கிப்ட் ஆக அனுப்பி வருகிறாராம்.
கடந்த பல வருடங்களாகவே இதை அவர் செய்து வருகிறாராம். இந்த விஷயத்தை தமன் ஒரு தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார். “அனுஷ்கா தான் என் வாழ்க்கை” என அவர் கூறியதும், அதை கேட்டு எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோவில் தமன் அந்த ஐபோன் 16ஐ காட்டி இருக்கிறார், நீங்களே பாருங்க.
Source: https://cineulagam.com/article/anushka-shetty-gifts-iphone-16-to-thaman-1726505045

