மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் ஆசிரியர் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (11) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டிலிருந்து வயல் அறுவடை பணிகளுக்காக சென்றிருந்த போது, வயலில் இருந்த பாம்பு ஒன்று தீண்டியுள்ளது.
இதனையடுத்து அவர் உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (12) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

