முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் (Kilinochchi) நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரும் குடும்பத்தினர் சுகாதார தரப்பு
மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சி-கண்டாவளை, குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த (10) ஆம் திகதி நாய் கடிக்கு இலக்கான
சிறுமி ஒருவர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெறாத நிலையில் கடந்த (25) ஆம் திகதி வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக கடந்த 26 ஆம் திகதி யாழ் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை
பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

குற்றச்சாட்டு

இந்த சம்பவத்தில், தியாகரன் சாருஜா என்ற நான்கு வயதுடைய சிறுமியே உயிரிழந்தார். இவரது சடலம் இன்று குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு! | Girl Bitten By Dog Kilinochchi Health Department

இதேவேளை, மேலும் 4 பேர் குறித்த நாய்க் கடிக்கு இலக்கானதுடன் அவர்களுடன்
சிறுமியின் பராமரிப்பில் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கும் சுகாதார
பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியரின் ஆலோசனைகளுக்கு அமைவாக
முற்பாதுகாப்பு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்பத்தினரும், பாதிக்கப்பட்டவர்களும், பிரதேச மக்களும்
சுகாதார தரப்பினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

தடுப்பூசி

நாய்க் கடிக்கு உள்ளான சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, குறித்த
நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா என கேட்ட வைத்தியருக்கு ஆம் என்று அழைத்து
சென்ற உறவினர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு! | Girl Bitten By Dog Kilinochchi Health Department

நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதாலும், சிறுமிக்கு குழந்தையில் போடப்படும்
தடுப்பூசி போடப்பட்டதாலும் மேற்கொண்டு விசர் நாய் தடுப்பு ஊசி போட
வேண்டியதில்லை எனக் கூறி வைத்தியர் அனுப்பி வைத்துள்ளர்.

சிகிச்சை

அத்துடன், குறித்த நாய் கடித்ததாக 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களும் தர்மபுரம்
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, அதே பதிலை வைத்தியர்
வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமி: சுகாதார தரப்பு மீது கடும் குற்றச்சாட்டு! | Girl Bitten By Dog Kilinochchi Health Department

இதேவேளை, நாய் கடித்த சம்பவம் தொடர்பில் சிகிச்சைக்காக செல்லும் போது, குறித்த நாய்
தொடர்பில் அறிந்து கொள்வதுடன், நாய்க்கு செலுத்தப்படும் தடுப்பூசி அட்டையை
பார்வையிட்ட பின் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.