முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று இலங்கை வரும் IMF பணியாளர்கள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் இன்று (24) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிரதிநிதிகள் குழு நாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தங்கியிருக்குமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுப் பிரதானி இவான் பபஜோர்ஜு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.

இந்த உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது, நாட்டின் அண்மையக்கால பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்பு 

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் செயல்திறன் மீளாய்வு நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டே இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இலங்கை வரும் IMF பணியாளர்கள் குழு | Imf Delegation Staffs Arrive In Sri Lanka Today

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதிக்கான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்து, அதற்கான அனுமதியை நாணய நிதியத்தின் நிர்வாகச் சபை கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வழங்கியிருந்தது.

இதற்கமைய, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்குக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/imf-delegation-staffs-arrive-in-sri-lanka-today-1782283680

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்