

மன்னார், தலைமன்னார் கிராமம் வடக்கு பகுதியில் பனைமரக்கூடலில் இன்று (18) ஏற்பட்ட தீவிபத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீவிபத்து தொடர்பான அவசர நடவடிக்கைகளின்போது, கிராம மக்கள் தீயணைப்பு பணிகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
இதனிடையே, இலங்கை இராணுவம், தலைமன்னார் கடற்படைப் பிரிவு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை அவதானித்ததுடன், தேவையான ஒத்துழைப்பையும் வழங்கினர்.
அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜாவின் கண்காணிப்பில் இந்த கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

