முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

எனினும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல், நிதி மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளின் தாக்கத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாயில் ஓரளவு மதிப்பு உயர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொள்வனவுகள் காரணமாக, சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரிமாற்ற வசதியும் உள்ளடங்கலாக, மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு தொகையானது 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்திருந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Sri Lankan Rupee Fallen Against Dollar

கடந்த ஜுலை மாதம் முடிவடைந்த நிலவரத்திற்கமைய, இந்த தொகை பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு நடப்புக் கணக்கானது 142 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜுலை மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டுத் துறைசார் செயற்பாடுகள் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடப்புக் கணக்கு தொடர்ச்சியாக இவ்வாறான பற்றாக்குறையைப் பதிவு செய்யும் நான்காவது மாதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.