முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உர மானிய கொடுப்பனவு நிறுத்தம் தொடர்பில் விவசாயிகள் அதிருப்தி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் உர மானிய கொடுப்பனவு தொடர்பில் வழங்கிய உறுதிமொழியை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளமை தொடர்பில் அதிருப்தி அடைவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய அதிகாரசபையின் மாவட்ட அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000
ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக
வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்திலேயே
இருந்தனர்.

ஆனால் இதனை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம்
அறிவித்திருக்கின்றது எனவே இதனை அரசியலாகப் பார்க்காது விவசாய மக்களினுடைய
நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இதனை திரும்ப வழங்குவதற்கு ஆவணம் செய்ய
வேண்டும் என குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு

மேலும், ஜனாதிபதி
கடந்த சில நாட்கள் சிறந்த சில நடவடிக்கைகளை எமது நாட்டிலும் அரசியலிலும்
மேற்கொண்டு வருவது எமது விவசாயிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் சந்தோஷத்தினை
அளிக்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், ஒரு சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டதால் தேர்தல் ஆணையாளர் இவ்வாறான சில கொடுப்பனவுகளை தற்போது
மேற்கொள்ள முடியாது எனக்கூறி ஒரு உத்தரவிட்டிருந்தார் எனவும் கூறியுள்ளார்.

உர மானிய கொடுப்பனவு நிறுத்தம் தொடர்பில் விவசாயிகள் அதிருப்தி | Cessation Of Fertilizer Subsidy Payment

Source: https://tamilwin.com/article/cessation-of-fertilizer-subsidy-payment-1727902754

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்