நாட்டில் நிலவும் நீடித்த வறட்சியான காலநிலைக்கு மத்தியில், மழை வேண்டி இலங்கை விமானப்படையினரால் விசேட மத அனுஷ்டானமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, முருத்தொட்டுவே ஆனந்த தேரர் பிற பிக்குகளுடன் இணைந்து, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான Y-12 ரக விமானம் மூலம் நாட்டின் சில பகுதிகளுக்கு புனித பீரித் நீர் வானிலிருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மக்கள், கால்நடைகள் மற்றும் சுற்றுச்சூழல் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மழை பொழிய வேண்டியும் காலநிலை சீரடைய வேண்டியும் இந்த மத அனுஷ்டானம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, புனித நீர் விமானம் மூலம் வானிலிருந்து நிலப்பரப்புகளில் தெளிக்கப்பட்டதுடன், நாட்டில் மழை பெய்து வறட்சி நிலைமைக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் நாட்டின் சில பகுதிகளுக்கு தற்போது கனமழை கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

