யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் மூளை
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பரிதாபகரமான சம்பவம் நேற்றையதினம் (29.04.2024) இடம்பெற்றுள்ளது.
ஆவரங்காலிலுள்ள கிழக்கு – புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிகா என்ற ஐந்து வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி : சொத்துக்கள் கொள்ளை
வைத்தியசாலையில் அனுமதி
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுமிக்கு கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட வேளை காய்ச்சல் சுகமாகியுள்ளது.
பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை
மீண்டும் அச்சுவேலி வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திடீரென நேற்றையதினம் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதுடன் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சிறுமி பரிதாபமாக மரணித்துள்ளார்.
மேலும், சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சிறுமியின் மரணத்துக்கான காரணம் மூளைக் காய்ச்சல் என உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்: வெளியான சுற்றறிக்கை
எந்தத் தேர்தல் முதலில் என்று இப்போது சொல்ல முடியாதாம்! – பிரதமர் தினேஷ் தெரிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |