முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சகோதரனின் இழிவான செயல்: யாழ்.நீதிமன்றின் உத்தரவு

தனது சகோதரியை தகாத முறைக்குட்படுத்தி, வலுக்கட்டாயமாக தகாத தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை , விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை! பிள்ளையானுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது எப்படி..

விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை! பிள்ளையானுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது எப்படி..

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் , போதை ஊசிகளை செலுத்தி தகாத தொழில் செய்யும்  கும்பல் ஒன்று  பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்துள்ளது.

சகோதரனின் இழிவான செயல்: யாழ்.நீதிமன்றின் உத்தரவு | A Girl Death Jaffna Suspect Has Been Remanded

 அதன் பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார்.

இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன் , உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , இல்ல நிர்வாகத்தினரால் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஈரான் இந்தியா சட்டவிரோத வர்த்தகம்: அமெரிக்காவின் அதிரடி முடிவு

ஈரான் இந்தியா சட்டவிரோத வர்த்தகம்: அமெரிக்காவின் அதிரடி முடிவு

நீதிமன்றின் உத்தரவு

வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது , பெண் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டுள்ளமையும் , பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

சகோதரனின் இழிவான செயல்: யாழ்.நீதிமன்றின் உத்தரவு | A Girl Death Jaffna Suspect Has Been Remanded

சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை காவல்துறையினர் , குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து , யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணின் சகோதரனே , பெண்ணை தவறான முறைக்குட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து தகாத தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து சகோதரனை கைது செய்த  காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்(26)  முற்படுத்தியவேளை , சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.