டுபாய்(dubai) செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஓய்வுபெற்ற பெண் விமானப்படை சிப்பாய் ஒருவரின் கைப்பையில் இருந்து ரி-56 ரக தோட்டாவை விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விமான நிலையத்தில் புறப்படும் முனையத்தில் பொதி ஸ்கானர்களைப் பயன்படுத்தி சோதனை செய்த போதே இது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற பெண் விமானப்படை சிப்பாய்
குருநாகல்(kurunagale), நிகதலுபொத்த, ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய ஓய்வுபெற்ற பெண் விமானப்படை சிப்பாய் ஒருவரே தோட்டா அடங்கிய பையை வைத்திருந்துள்ளார்.
இவர் நேற்று (31) மாலை துபாயில் வசிக்கும் தனது சகோதரியை சந்திப்பதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
கைப்பையில் தோட்டா எப்படி வந்தது
தனது கைப்பையில் தோட்டா எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
எனினும், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.