மன்னார் – முத்தரிப்புத்துறை பகுதியில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் குறித்த குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (24) காலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மூன்று பிள்ளைகளின் தந்தை
இதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பதிவான விபத்துகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |